

மெலட்டூர்:
மெலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் பள்ளி தலைமையாசிரியர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்றது.
பள்ளி புரவலர் சங்கரன், உதவி தலைமை ஆசிரியர்கள் சத்தியமூர்த்தி,செல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். தமிழ்ஆசிரியர் சுப்ரமணியன் வரவேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுவில் இடம்பெறக்கூடிய உறுப்பினர்கள் அவர்களின் செயல்பாடுகள், மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யாக்கண்ணு கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.
அதேபோல வடக்கு மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மேலாண்மைக்குழு கூட்டத் திற்கு வடக்குமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் தலைமை வகித்தார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர் செல்வபாரதிகண்ணன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விரைவில் பள்ளிக்கு மேலாண்மைக்குழு விரைவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.