வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக முகாம்

ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக முகாமில் பள்ளி மாணவர்களுக்கு சரிவிகித உணவின் முக்கியத்துவத்தை உணவு பிரமிடு மூலமாக விளக்கினர்.
உணவின் முக்கியத்துவத்தை பற்றி வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கினர்.
உணவின் முக்கியத்துவத்தை பற்றி வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கினர்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் இளங்கலை பட்டபடிப்பு பயிலும் மாணவிகள் தங்களது ஊரக வேளாண் பட்டறிவு முகாமின் ஒரு பகுதியாக ஆண்டலாம் பேட்டை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சரிவிகித உணவின் முக்கியத்துவத்தை உணவு பிரமிடு மூலமாக விளக்கினர்.

 உணவு பிரமிடானது 4 பகுதிகளை உள்ளடக்கியது. கீழ்பகுதியிலான முதல் பகுதியில் தானியங்களும், 2-ம் பகுதியில் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளும், 3ம் பகுதியில் பால் மற்றும் இறைச்சி பொருட்களும், 4-ம் பகுதியான மேல்பகுதியில் கொழுப்பு மற்றும் இனிப்பு பொருட்களையும் இந்த உணவு பிரமிடானது உள்ளடக்கியுள்ளது.

இந்த உணவு பிரமிடின் மூலம் சரிவிகித உணவு உட்கொள்ளல் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

மேலும் மாணவர்களுக்கு தண்ணீர் பருகுதல் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கப்பட்டது. பயிற்சியில் ‌தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்துமதி மற்றும் ஆசிரியர்கள் ரமேஷ், உஷா, சோபியா ஆகியோர் பங்கேற்றனர்.

தொடக்கப்பள்ளி மாணவர்கள் உணவு பிரமிடு குறித்து அவர்களின் கருத்துக்களை சக மாணவர்களிடையே பரிமாறி கொண்டனர். ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, ஐஸ்வர்யா, அனுசுயா, பபிதா, பாரதி, பவதாரணி, திவ்யா, ஹரிணி, இந்துமதி மற்றும் ஐஸ்வர்யா பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com