

வல்லம்:
தஞ்சை அருகே பாளையப்பட்டியில் உள்ள தெற்கு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு கிராம மக்கள் பங்கு தொகையாக அரசுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்திய பிறகு சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை சந்தித்து கருத்துருக்களை வழங்கினர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் கமல்தாசன், தலைமை ஆசிரியர் கார்த்திகேயாயினி, ஆசிரியர்கள் பாலமுருகன், ஜெயந்திமாலா, சுகன்யா உடன் இருந்தனர். அப்போது பள்ளியை தரம் உயர்த்தி உதவிட எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.
கல்வி துறை மூலம் தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டு பள்ளிக் கல்விதுறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளியில் சுமார் 165-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் தங்கள் படிப்பினை பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்க வேண்டியும், கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் இப்பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை கல்வி கிடைக்க முதல்-அமைச்சர் உதவிட வேண்டும், கிராமப்புற வளர்ச்சிக்காக பாடுபடும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இப்பள்ளியை தரம் உயர்த்தி ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என மாணவர்கள் ஆசிரியர்கள், பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் முறையாக துறை வழியாக கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கும் கருத்து ருக்கள் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.