தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவுதினம் அனுசரிப்பு

தஞ்சையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவுதினம் அனுசரித்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினைத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினைத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை தெற்கு மாவட்ட  காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன்பு ராஜீவ்காந்தியின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் பூதலூர் மோகன்ராஜ், சோழமண்டல சிவாஜிபாசறை தலைவர் சதா வெங்கட்ராமத்தேவர், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், கோபால் அய்யர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜ் சேனைகொண்டார் ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரமேஷ் சிங்கம், கவி கோவிந்தராஜ், சுந்தர், அருணாசலம், பழனிவேல், புருசோத்தமன், ராமகிருஷ்ணன், சிற்றரசன், மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவரும் மாவட்ட பொதுச்செயலாளர்  பூதலூர் மோகன்ராஜ் தலைமையில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com