

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுவினியோக திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும்,
ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த சென்னை உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி மே மாதத்திற்கான பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களிலும் இந்த கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
எனவே குறைபாடுகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.