குறைதீர்க்கும் கூட்டத்துக்கு தடை- கலெக்டர் தகவல்

தஞ்சை மாவட்டத்தில் திங்கட்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.
தஞ்சை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது மனுக்களை 

https://cmhelpline.tnega.org/portal/en/home என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 

2 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும் மனுக்களை அளிக்கலாம். 

பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறும் தேதி 

பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com