பேராவூரணி அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழா

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
ஆண்டுவிழா சிறப்புரை.
ஆண்டுவிழா சிறப்புரை.
Published on

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் தனராஜன் தலைமை வகித்து பேசுகையில், கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளில் 100 விழுக்காடு மாணவர் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றுள்ளனர். 

கல்லூரியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது என்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அரசுக் கல்லூரி முதல்வரும் புதுக்கோட்டை லோக் ஆயுக்தா உறுப்பினருமான சிவ.கார்த்திகேயன் கலந்து கொண்டு ஆண்டுவிழா சிறப்புரையாற்றினார். 

விழாவில் கல்லூரி ஆண்டு விழா மலரை சிறப்பு விருந்தினர் சிவ.கார்த்திகேயன் வெளியிட்டார். முதல் பிரதியை முதல்வர் முனைவர் நா.தனராஜன் பெற்றுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com