பகுதி நேர நூலகம் திறப்பு

நாயக்கர்பேட்டை கிராமத்தில் பகுதி நேர நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி நாயக்கர்பேட்டை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் பகுதி நேர நூலகம் அமைத்துக்கொள்ள மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன், கண்காணிப்பாளர் கதிரேசன் ஆகியோர் அனுமதி அளித்தனர். இதையடுத்து இங்கு பகுதி நேர நூலக திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். கிளை நூலகர் குமார் அனைவரையும் வரவேற்றார். பாபநாசம் ஒன்றிய குழுத்தலைவர் சுமதி கண்ணதாசன் பகுதிநேர நூலகத்தை திறந்து வைத்தார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் கணேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பரமேஸ்வரி, கார்த்திக்கேயன், விஜயலெட்சுமி, கிளை நூலகர் ஜவகர், ஊர் புற நூலகர்கள் முருகானந்தம், குமணன், கிராம மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் முருகையன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com