தேர்தல் முன் விரோதத்தில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு - 6 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளியில் நடந்து முடிந்த பேரூராட்சி தேர்தல் முன் விரோதம் காரணமாக பாரதிராஜாவை வெட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி& பழமார்நேரி சாலை பகுதியில் வசிப்பவர் பாரதி-ராஜா (வயது25).தனியார் நிறுவனம் ஒன்றில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருபவர். 

இவர் சம்பவத்தன்று இரவு திருக்காட்டுப்பள்ளி- பழமார்நேரி சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம் எதிரில் நின்று கொண்டிருந்த போது காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால்

சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் பலத்த காயமடைந்த பாரதிராஜா திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் வசந்தி, தப்பி ஓடிய கார் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும், தஞ்சைக்கும்

தகவல் அனுப்பினார்.தஞ்சை புறநகர் பகுதிகளில் நடந்த தீவிர தேடுதல் வேட்டையில் காரில் தப்பிச்சென்றவர்களை பிடித்து திருக்-காட்டுப்பள்ளி போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை

நடத்தினர். நடைபெற்று முடிந்த பேரூராட்சி தேர்தல் முன் விரோதத்தில் பாரதிராஜா மீது தாக்குதல் நடந்ததாக தெரியவந்தது.இதில் திருச்செனம்பூண்டி செந்தில்குமார் (35), நடுப்படுகை பிரவீண் (24),

பவனமங்கலம் மருதுபாண்டி (26), ஒன்பத்துவேலிபிரசாந்த் (27), கூடநாணல் ஹரிஹரசுதன் (27), பழைய ஆற்காடு விவேக் (23) ஆகிய 6 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து திருவையாறு

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com