

பாபநாசம்:
பாபநாசம் அரயபுரம் தட்டுமால்படுகை பகுதியில் வசித்து வரும்
ஜெகன் மகள் திவ்யா (வயது 17). இவரது வீட்டில் அனைவரும்
குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தனர். பின்னர் அதிகாலை
5 மணியளவில் எழுந்து பார்க்கும்போது திவ்யாவை காணவில்லை.
இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உறவினர்கள் வீடுகளிலும், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் மீனாட்சி (வயது 39)
பாபநாசம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். பாபநாசம்
போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன
திவ்யாவை தேடி வருகின்றனர்.
இதேபோல் பண்டாரவாடை வி.பி. நகரில் வசித்து வரும்
முகமது ரபீக் மகள் ஜாஸ்மின் பர்வீன் (வயது 21). சம்பவத்தன்று
இவர் தனது தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு
சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவருடைய தாயார் ரம்ஜான் பீவி (வயது 45) என்பவர்
பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாபநாசம்
போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஜாஸ்மின்
பர்வீனை தேடி வருகின்றனர்.