மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

திருவையாறில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி  மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திருவையாறு வட்டார வள மையம் சார்பில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆணையின்படியும் , முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார்  வழிகாட்டுதலின் படி, பிறப்பு முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி  மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது.

இம்முகாமில் திருவையாறு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் என 82 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 30 பேர் அடையாள அட்டையும், 20 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், 10 பேருக்கு உதவி உபகரணங்களும்,  10 பேர் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்திலும் சேர்ந்து பயன்பெற்றனர்.

இந்நிகழ்வை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாரா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ,சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியை திருவையாறு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரவணன் ஒருங்கிணைத்தார் . ஆசிரியர் பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com