

பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ், குருவிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், (மார்ச் 24) நாளை வியாழக்கிழமை, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் காலை 9 மணி முதல் மதியம் மணிவரை நடைபெறவுள்ளது.
முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை மற்றும் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் உதவி உபகரணங்கள் வழங்கப்படும். மேலும், இலவச அறுவை சிகிச்சைக்கும் தேர்வு செய்யப்படுவர்.
மருத்துவ முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
இம்முகாமில், பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு, சேதுபாவாசத்திரம் வட்டார வள மைய மேற்பார்வை யாளர் (பொறுப்பு), ஜெ.கென்னடி, வட்டார ஒருங்கிணைப்பாளர், இயன்முறை மருத்துவர் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.