மலேரியா விழிப்புணர்வு முகாம்

திருவையாறில் மலேரியா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மலேரியா விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மலேரியா விழிப்புணர்வு முகாம் நடந்தது.
Published on

திருவையாறு:

திருவையாறு அரசர் கல்லூரி வளாகத்தில் நடுக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு மலேரியா விழிப்புணர்வு முகாம் நடந்தது. 

மருத்துவர் சுகன்யாவின் தலைமையில் நடந்த இம்முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் ரமேஷ், நாட்டு நலப்பணி திட்ட

ஒருங்கிணைப்பாளர்கள்ருக்மணி, கண்ணதாசன், இளநிலை பூச்சியியல் வல்லுநர் மாயவன், கார்த்திகேயன், சுதாகர் உள்ளிட்ட சுகாதார ஆய்வாளர்கள் இம்முகாமில் கலந்துகொண்டார்கள். 

கொசுக்களின் மூலம் மனிதர்களுக்கு மலேரியா காய்ச்சல் வருவதற்கான சுற்றுச்சூழல் குறித்த காரணங்களையும், 

கொசுக்கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்தும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று இலவச சிகிச்சை

மேற்கொள்ள வேண்டியது குறித்த விழிப்புணர்வு கருத்துக்களும் மாணவ, மாணவிகளுக்கு விவரமாக எடுத்துரைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com