முன்னாள் ராணுவ வீரரிடம் நகை அபேஸ்

தஞ்சையில் ஓடும் பஸ்சில் முன்னாள் ராணுவ வீரரிடம் 5 பவுன் நகை அபேஸ் - மர்மநபர்கள் கைவரிசை
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

தஞ்சாவூர்:

திருச்சி கிராப்பட்டி எஸ்.பி.ஐ. காலனி ஆர்மி அவென்யூவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 51) முன்னாள் ராணுவ வீரர். சம்பவத்தன்று இவர் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்துக்கு தனியார் பஸ்சில் வந்தார்.

பின்னர் பஸ்சை விட்டு இறங்கி பார்த்தபோது தான் வைத்திருந்த கைப்பை மற்றும் அதில் இருந்த ஐந்தரை பவுன் நகை, தங்க ஆரம்1 ஆகியவை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைப்பையை அபேஸ் செய்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.55 ஆயிரம் என கூறப்படுகிறது.

இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com