வல்லம் சிகிச்சை மையத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள்

வல்லம் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிப்படைந்து 

வெறும் 7 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் 

அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com