

தஞ்சாவூர்:
தஞ்சை கோட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
இதற்கு கோட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பழனிசாமி,
அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி
கலந்து கொண்டு பேசினர்.
போராட்டத்தில் நெடுஞ்சாலையை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு 2 சாலை பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்கி கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பண பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, சாலை ஆய்வாளர் சங்க மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் இளங்கோவன், மருந்தாளுநர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கோட்ட பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.