ஓய்வூதியர்களின் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நாள் தர்ணா

பாபநாசத்தில் ஓய்வூதியர்களின் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தர்ணா போராட்டம் நடைபெற்றது.
Published on

பாபநாசம்:

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு ஊதிய சங்கத்தின் சார்பில் பாபநாசம் பழைய பேருந்து நிலையம் முன்பு ஓய்வூதியர்களின் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

பாபநாசம் வட்ட தலைவர் சபாபதி தலைமை வகித்தார். வட்ட இணை செயலாளர்கள் மாதவன், குணசேகரன், செயற்குழு உறுப்பினர்கள், சண்முகம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பாபநாசம் வட்ட செயலாளர் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் ராஜகோபால் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.

மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவை திரும்பப் பெற அளிக்கப்பட்ட மனுக்களில் நிலுவையில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை உடனடியாக தமிழக அரசு தீர்த்து வைக்க வேண்டும். 

தமிழக முதல்-அமைச்சர் சட்டமன்றத் தேர்தலின்போது அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் குறித்து கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் கூடுதல் ஓய்வூதியம் பெறும் தகுதியான வயதை 80-லிருந்து 70-தாக குறைத்திட வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி எழுத்-தர்கள் உள்ளிட்ட அனைவ-ருக்கும் குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.7850 வழங்கிட வேண்டும். 

அரசு பணியில் 1.4.2003 முதல் பணி அமர்த்-தப்பட்ட அனைவரையும் பழைய ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் அடைக்கலசாமி, முருகையன், கலியமூர்த்தி, விஜயாள், கோகுல் தாஸ், சேகர், வரதராஜன், சோமநாத ராவ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com