போட்டி தேர்வுக்காக இலவச பயிற்சி மையம்

பேராவூரணியில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.
போட்டித்தேர்வு பயிற்சி மையம்.
போட்டித்தேர்வு பயிற்சி மையம்.
Published on

பேராவூரணி:

பேராவூரணி பகுதியில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் அரசுப் பணி வாய்ப்பினை பெற்றிடும் வகையில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் தொடக்க விழா சமூக ஆர்வலர் ஆறு.நீலகண்டன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி மையத்தை தாசில்தார் சுகுமார் தொடங்கி வைத்தார். 

அசோக்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசும்போது:&

பயிற்சி மையத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தக்கூடிய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியில் மாணவர்கள் அதிகம் சேரும்போது வர்த்தக சங்க கட்டடத்தை பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்து தரப்படும். அதற்கான வாடகையை சொந்த செலவில் செய்து தருவேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அருள்ராஜ், மருத்துவர் துரை.நீலகண்டன், வெங்கடேசன், முனைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com