பறக்கும் படையினர் வாகன சோதனை

தஞ்சை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பறக்கும் படையினர் வாகன சோதனை.
பறக்கும் படையினர் வாகன சோதனை.
Published on

வல்லம்:

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பு மனுதாக்கல் பணிகள் மும்முரம் அடைந்துள்ளது. 

வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி ரவுண்டானாவில் தஞ்சை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களையும் கோட்ட கலால் அலுவலர் அருணகிரி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com