

கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் வசிப்பவர் விஸ்வலிங்கம் மனைவி பிச்சையம்மாள் (வயது52). விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று பிச்சையம்மாள் வீட்டிலிருந்து இந்திராநகர் பகுதியில் சென்றபோது திருவையாறு நோக்கி அதிவேகமாக வந்த மினி வேன் மோதியதில் பிச்சையம்மாள் படுகாயமநடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதை அறிந்த அவரது உறவினர்கள் மினி வேன் டிரைவரை கைது செய்யக் கோரி திடீர் சாலை மறியல் செய்தனர்.இதனால் கும்பகோணம்& திருவையாறு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த பாபநாசம் டி.எஸ்.பி பூரணி, கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு அய்யம்பேட்டை வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிச்சையம்மாள் மகனான கபிஸ்தலம் மின்சார வாரியத்தில் பணிபுரியும் சோமசுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் வேன் டிரைவர் வைகுண்டமூர்த்தி (36) என்பவரை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.