வாலிபர் இறந்த சம்பவத்தில் தந்தை - மகன் கைது

கும்பகோணம் அருகே வாலிபரை தள்ளி விட்டதில் இறந்த சம்பவத்தில் தந்தை - மகன் கைது
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள விசலூர் மேல தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருடைய மகன் சந்தோஷ்ராஜ் (வயது22). 

இவரது சகோதரர் பிருத்திவிராஜ். வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தற்போது ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று சந்தோஷ்ராஜ் அப்பகுதியை சேர்ந்த ஒரு லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது தந்தை சவுந்தரராஜன் மற்றும் சகோதரர் பிருதிவிராஜன் ஆகியோர் அங்கு சென்று சந்தோஷ்ராஜை அழைத்து சென்றனர்.

அப்போது சந்தோஷ்ராஜை அவரது தந்தை சவுந்தர்ராஜன் மற்றும் பிருதிவிராஜ் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த சந்தோஷ்ராஜ் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து நாச்சியார்கோயில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சவுந்தர்ராஜன் மற்றும் பிருதிவிராஜன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com