வாய்க்காலில் தவறி விழுந்து காவலாளி பலி

பாபநாசம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த காவலாளி உயிரிழந்தார்.
வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி
வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி
Published on

பாபநாசம்:

பாபநாசம் அரயபுரம் கிராமத்தில் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் வாய்க்காலில் ஆண் பிணம் கரை ஒதுங்கியது.

தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்த போது இறந்து கிடந்தவர் மேல கபிஸ்தலம் மெயின் ரோட்டை சேர்ந்த செந்தில்குமார் (வயது 45) என்பது தெரியவந்தது. 

இவர் பாபநாசத்தில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை செய்து வந்ததும், சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அரயபுரம் வாய்க்காலில் விழுந்து இறந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து அவருடைய மனைவி சாந்தி (40) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com