தி.மு.க. கவுன்சிலர் தகுதி நீக்கம்

சகோதரரின் ஒப்பந்த பணி விவரத்தை வேட்புமனுவில் மறைத்த விவகாரத்தில் தஞ்சை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

தஞ்சாவூர்:

ஆனால் அண்ணா.பிரகாஷ், தனது வேட்பு மனுவில் அந்த தகவலை மறைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டவரும், மாநகராட்சி ஆணையரு மான சரவணக்குமார், இது தொடர்பாக  விளக்கம் கேட்டு கவுன்சிலர் அண்ணா.பிரகாஷ் மற்றும் அவரது தம்பி ராம்பிரசாத் ஆகியோருக்கு கடந்த 3-&ந் தேதி நோட்டீசு அனுப்பி இருந்தார்.

இந்த நோட்டீசுக்கு பதில் அளிப்பதற்கு 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று அண்ணா.பிரகாஷ் பதில் நோட்டீசு அனுப்பி இருந்தார். ஆனால் அவருடைய தம்பி ராம்பிரசாத் கடந்த 18-ந் தேதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முன்பு நேரில் ஆஜராகி, அண்ணா.பிரகாஷ் குறிப்பிட்டுள்ள முகவரியில் உள்ள வீட்டினை, ஒப்பந்த பணியை மேற்கொள்ள சொத்து மதிப்பாக மட்டுமே காட்டியுள்ளேன். ஆனால் இருவரும் தனித்தனியாக வசித்து வருகிறோம் என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் அண்ணா.பிரகாஷ் கேட்ட கால அவகாசம் முடிந்த நிலையில் தன்னியல்பாகவே கவுன்சிலர் பதவி வகிக்கும் தகுதியினை அண்ணா.பிரகாஷ் இழந்து விட்டதாக கூறி அவருக்கு ஆணையர் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆணையர் சரவணகுமார் கூறுகையில், “அண்ணா.பிரகாசுக்கும், அவருடைய தம்பி ராம் பிரசாத்துக்கும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஏற்கனவே நோட்டீசு அனுப்பப்பட்டது. இதில் ராம்பிரசாத் ஆஜராகி தனது பதிலை அளித்துள்ளார். ஆனால் அண்ணா.பிரகாஷ் ஆஜராகவில்லை.

ராம்பிரசாத் அளித்த தகவலின் அடிப்படையில், அண்ணா.பிரகாஷ் கவுன்சிலர் தகுதியை இழந்து விட்டதாக கூறி அவருக்கு தற்போது பதிவஞ்சலில் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியின் முதல் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. கவுன்சிலர் பதவியை இழந்து விட்ட அண்ணா.பிரகாஷ் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது” என்றார்.இதுகுறித்து அண்ணா.பிரகாஷ் கூறுகையில், “நான் கவுன்சிலராக பதவி வகிக்கும் தகுதியை இழந்து விட்டதாக மாநகராட்சி ஆணையர் நோட்டீசு அனுப்பியிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.

ஆனால் அந்த நோட்டீசு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. என் தம்பி ராம்பிரசாத் உரிய விளக்கம் கொடுத்தும் அதனை ஆணையர் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன், எனது தம்பியின் ஒப்பந்த வேலையை ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இதனை நான் சட்டரீதியாக சந்திக்க உள்ளேன்” என்றார். டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ.வின் அக்கா மகன் அண்ணா.பிரகாஷ் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com