நெல் வயல்களில் குருத்துப் பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்கம்

நெல் வயல்களில் குருத்துப் பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.
விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.
Published on

தஞ்சாவூர்:

ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் தங்களது ஊரக பட்டபடிப்பின் ஒரு பகுதியாக, கீழமருத்துவக்குடி கிராமத்தில் இனக்கவர்ச்சி பொறியினைப் பற்றி செயல் விளக்கமளித்தனர். 

நெல் வயல்களில் பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தும் குருத்துப் பூச்சி மற்றும் இலை சுருட்டுப் புழுவினைக் கட்டுப்படுத்துவதற்கு இனக்கவர்ச்சி பொறியினை உபயோகிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறியினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் அதன் செயல்முறை குறித்தும் கிராமத்தினருக்கு மாணவி பபிதா விளக்கமளித்தார்.

இனக்கவர்ச்சி பொறியினுள் ஒரு திரவம் வைக்கப்படும், அத்திரவம் ஒவ்வொரு பூச்சிக்கும் வேறுபடும். 30 முதல் 40 நாட்களுக்கு ஒரு முறை அத்திரவத்தை மாற்றி புதிதாக ஒன்று வைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 10 முதல் 12 இனக்கவர்ச்சி பொறிகள் வைப்பதன் மூலம், குறிப்பிட்ட பூச்சியின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி  பாதிப் பினைக் குறைக்கலாம் என்றுரைத்தனர். 

இச்செயல் விளக்கம் கீழமருத்துவக்குடி கிராமத்தில் ராமநாதன் வயலில் நடைபெற்றது. இவ்வாறு, மாணவிகள் பபிதா, பாரதி, ஹரிணி, இந்துமதி, ஐஸ்வர்யா ஆகியோர் இனக்கவர்ச்சி பொறியின் பயன்பாட்டினை ஊர் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com