

கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள ஈச்சங்குடி மெயின் ரோட்டில் வசிப்பவர் கார்த்திகேயன் மனைவி அனிதா (26). இவரது கணவர் கார்த்திகேயனின் பெரியப்பா ராமகிருஷ்ணன் என்பவருக்கும், இவருக்கும் சொத்து
சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கார்த்திகேயன், அவரது பெரியப்பா ராமகிருஷ்ணனை தகாத வார்த்தையால் திட்டியதால் மனமுடைந்த ராமகிருஷ்ணன் இறந்துவிட்டார் என கூறி இவரது உறவினர்கள் மாரியப்பன் மகன்கள் கணேசன், சேட்டு, கணேசன் மகன் வசந்த், சேட்டு மகன்கள் கல்யாணசுந்தரம், விக்னேஷ், மற்றும் சிலர் அனிதாவின் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை உடைத்து சூறையாடி அனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனராம்.
இதுகுறித்து அனிதா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம்
சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வீட்டை அடித்து உடைத்து சூறையாடி கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.