மாட்டு, குதிரை வண்டி எல்கை பந்தயம்

வேப்பங்குளத்தில் மாட்டு, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
வேப்பங்குளத்தில் மாட்டு, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடந்தது.
வேப்பங்குளத்தில் மாட்டு, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடந்தது.
Published on

மதுக்கூர்;

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைதாலுக்கா மதுக்கூர் ஒன்றியத்தி ற்குட்பட்ட வேப்பங்குள த்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதற்கு சிங்கவணம் தலைமையில் டிஎஸ்பி செங்கமலக் கண்ணன் பந்தயத்தை தொடங்கி வைத்தார். பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ சி.வி.சேகர், ஒன்றிய செயலாளர் துரை.செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பெரிய மாடு, கரிச்சான்மாடு நடு மாடு, புது குதிரை, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை என ஆறு வகையான போட்டிகள் நடந்தது இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி குதிரைவண்டி ஓட்டுநர்கள் பரிசுகள் வழங்கப்பட்டன பந்தயத்தை செங்கல்பட்டு திருப்பத்தூர் சிவகங்கை ராமநாதபுரம் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குதிரை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு வேப்பங்குளம் கிராம மக்கள்ஏற்பாடுகள் செய்தி ருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com