அடகு கடை ஊழியரை தாக்கி நகை கொள்ளை

மர்ம நபர்கள் சிலர் அடகு கடைக்குள் புகுந்து ராஜேந்திரனை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர்.போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அடகு கடை ஊழியரை தாக்கி நகை கொள்ளை
Published on

அம்மாபேட்டை:

பாபநாசம் அருகே இரும்புதலை கிராமத்தில் திருப்பத்தூரை சேர்ந்த சகோதரர்கள் தமிழ்செல்வன், சரவணன் , கார்த்திகேயன்ஆகியோர் நகை அடகு கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் திருப்பத்தூரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 72) ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் அடகு கடைக்குள் புகுந்து ராஜேந்திரனை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த ராஜேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com