கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் தங்கப் பத்திர முதலீட்டு திட்டம் தொடக்கம்

கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் தங்கப் பத்திர முதலீட்டு திட்டம் தொடங்கப்பட்டது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

தஞ்சாவூர்:

கும்பகோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய ரிசர்வ் வங்கியின், தங்கப் பத்திர முதலீட்டு திட்டத்தினை 10.1.22 முதல் 14.1.22 காலத்திற்கு வெளியீட்டு உள்ளது. இத்திட்டத்தின் படி தங்கத்தினை ஒவ்வொரு யூனிட்களில் வாங்கிக் கொள்ளலாம். 

ஒரு யூனிட் என்பது 24 காரட் தங்கத்தின் ஒரு கிராமுக்கு சமம்.  தற்சமயம் 

ஒரு யூனிட்டின் மதிப்பு ரூ.4786 (ஒருகிராம்) ஆகும்.  

மேற்படி தங்கப்பத்திர முதலீட்டு திட்டமானது, கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் தலைமை அஞ்சலகம், மேலக்காவேரி தலைமை அஞ்சலகம் உட்பட அனைத்து அஞ்சலகங்களிலும், இன்று 10&ந்தேதி முதல் வருகிற 

13-ந்தேதி வரை விற்பனை செய்யப்படும். 

தங்கத்தினை பத்திரமாக வாங்குவதால் பாதுகாப்பு பற்றிய பயமும், தங்கத்தின் தரத்தினை பற்றிய பயமும், ஏனைய இதர செலவுகள் 

(செய்கூலி, சேதாரம்,) இல்லை. பொதுமக்கள் செய்யும் முதலீடுகளுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியும் ரிசர்வ் வங்கியினால் வழங்கப்படும்.   

கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகமான லாபம் தரக் கூடிய திட்டமாக இந்த தங்கப் பத்திர முதலீடு உள்ளதால், பொதுமக்களிடம் அதிக வரவேற்பு பெற்ற திட்டமாகவும் உள்ளது.  கடந்த 2016-2017-ம் ஆண்டு இத்திட்டத்தில் முதலீடு செய்தவர்கள்.

இந்த 5 ஆண்டுகளில் அவர்களின் முதலீடு ஏறக்குறைய இரட்டிப்பு 

ஆகி உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த 

சிறப்பு தங்கப் பத்திர திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம்.

இவ்வாறு  அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com