வேளாண் மாணவிகள் செயல்முறை விளக்கம்

மதுக்கூர் அருகே தென்னையில் தஞ்சை வாடல் நோய் குறித்து வேளாண் மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
தஞ்சை வாடல் நோய் குறித்து செயல்முறை விளக்கம்
தஞ்சை வாடல் நோய் குறித்து செயல்முறை விளக்கம்
Published on

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் அருகே அண்டமி கிராமத்தில் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் மதுமதி, பனிமலர், மோனிஷா, பாலஸ்ரீ வைஷ்மா, நர்மதா, நிவேதா, நந்தினி, கவிதா, ஜோதிர்மை லாவண்யா ஆகியோர் தென்னையில் காணப்படும் தஞ்சாவூர் வாடல் நோய் அறிகுறிகளையும், அதற்கான மேலாண்மை முறைகளையும் மதுக்கூர் அண்டமி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து வயலில் செயல்முறை விளக்கம் மூலம் எடுத்துரைத்தனர்.

இந்நோய் தாக்குதலின் அறிகுறி, தண்டின் அடிப்பாகத்தின் வழியாக செஞ்சிவப்பு நிற திரவம் கசிந்து அது மேல்நோக்கி பரவும். மேலும் இலைகள் தொங்கிய நிலையில் காணப்படும் அதன்பின் தண்டின் அடிப்பகுதியில் அரை தட்டு காளான் வித்து தோன்றும். 

கடைசியில் மரம் மடிந்துவிடும். இதனை கட்டுப்படுத்த 1 மில்லி ஹெக்ஸகோனசோல் உடன் 100 மில்லி தண்ணீர் கலந்து வேர் மூலம் செலுத்தலாம். மேலும் மரத்தை சுற்றி 1.5 மீட்டர் தூரத்தில் 1 சதவீதம் போர்டோ கலவையை 40 லிட்டர் என்ற அளவில் ஊற்றி மண்ணை நனைக்க வேண்டும் ஆகியவற்றை செயல்முறை விளக்கமாக பத்து விவசாயிகளுக்கு செய்து காட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com