தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் நூல்கள் விற்பனை

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடங்கியது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் நூல்கள் விற்பனையை துணைவேந்தர் திருவள்ளுவன் தொட
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் நூல்கள் விற்பனையை துணைவேந்தர் திருவள்ளுவன் தொட
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை  தொடங்கியது. இந்த விற்பனையைத்  துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கி வைத்தார். 

அப்போது அவர் பேகையில் கூறியதாவது;-

தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மட்டுமன்றி தமிழ் உலகின் தலைசிறந்த ஆய்வறிஞர்களின் படைப்புகள், பழந்தமிழ் இலக்கி-யங்கள், அகராதி மற்றும் களஞ்சியங்கள் என பலவகை நூல்களையும் ஆழமாக ஆய்வு செய்து, அவற்றை நூலாக வெளியிடும் அரும்பணியைத் இப்பல்கலைக்கழகப் பதிப்புத்துறை மேற்கொண்டு வருகிறது.

இப்பதிப்புத் துறையின் மூலம் இதுவரை 525 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக 12-வது திட்ட நல்கை நிதியிலிருந்து 2021-ம் ஆண்டில் 16 புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. 2021-22&ம் ஆண்டில் 43 மறுபதிப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2009-ம் ஆண்டில் ரூ.13.57 லட்சத்துக்கு நூல்கள் விற்கப்பட்டன. 

இவ்வாண்டு இதுவரை ரூ.2.94 லட்சம் மதிப்பில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

பொதுமக்கள் மலிவு விலையில் அரிய நூல்களை வாங்கிப் பயன்-பெறும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளின்போது 50 சதவீதம் சிறப்புக் கழிவு விலையில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டும் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.  அடுத்த மாதம் 17-ந் தேதி வரை 30 நாள்களுக்கு 50 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை நடைபெறுகிறது.

இதை மாணவர்கள், ஆய்வாளர்கள், தமிழறிஞர்-கள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9489102276 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com