

பேராவூரணி:
பேராவூரணி அருகே பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இதில் மேலாண்மை குழுவுக்கு 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி தலைமை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் பழனியம்மாள் நீலமேகம், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் த.முருகையன் வரவேற்றார். பேரூராட்சி கவுன்சிலர்கள் அஞ்சம்மாள் ராஜேந்திரன், ரெஜா பீவி ரஹீம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சரண்யா பள்ளி மேலாண்மை குழு தலைவராகவும், அருண் சுதேஷ் துணைத் தலைவராகவும், தலைமையாசிரியர் லாதாஸ்வரி, ஆசிரியர் பிரதிநிதி முருகையன், பிரதிநிதிகள் சூர்யா, ரேவதி, மீனாட்சி, நீலகண்டன், மூர்த்தி, தேவி, மேனகா, ரஞ்சிதா, சரிதா, காளிதாஸ், பகுருதீன் அலி ஆகியோர் பெற்றோர் பிரதிநிதிகளாகவும், உள்ளாட்சி பிரதிநிதிகளான பழனியம்மாள், ராஜேந்திரன் மற்றும் கல்வியாளர் தேன்மொழி சுய உதவி குழு உறுப்பினர் கவிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
இதில் பள்ளிக்கு தேவையான கழிவறை கட்டுவது, மாணவர்களுக்கு தேவையான கட்டிட வசதி ஏற்படுத்துவது, விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தருவது. ஆசிரியர் பற்றாக்குறையை தற்காலிகமாக சரி செய்ய பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 2 ஆசிரியர்களை நியமிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது.