ஆசிரியர் திட்டியதால் 12-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை

ஒரத்தநாடு அருகே ஆசிரியர் திட்டியதால் 12-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

ஒரத்தநாடு:-

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பருதியப்பர் கோவிலை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 

இவரது மகள் வித்யா (வயது17). இவர் ஒரத்தநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன் மாணவிகள் ஒரு ஆசிரியரின் புகைப்படத்தை எடுத்து கிண்டல் செய்யும் நோக்கில் செல்போன்களில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர்.

இதைப்பார்த்த ஆசிரியர்கள் ஸ்டேட்டஸ் வைத்துள்ள மாணவிகளை அழைத்து கண்டித்துள்ளனர். பள்ளியின் துணை முதல்வர் சசிகுமார், மாணவிகளை பொது தேர்வில் உங்கள் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த மாணவி வித்யா நேற்று இரவு வழக்கம் போல் தனது அறையில் படுக்க  சென்றுள்ளார்.

காலை வித்யா நீண்டநேரம் கதவு திறக்காமல் இருப்பதை பார்த்த குடும்பத்தினர் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே பார்த்தபோது வித்யா தூக்கு போட்டுக் கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து வித்தியாவின் சித்தப்பா சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார்  வழக்கு பதிவு செய்து பள்ளியின் துணை முதல்வர் சசிகுமாரை கைது செய்தனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com