கொட்டகை இல்லாததால் மக்கள் அவதி

மயான கொட்டகை இல்லாததால் சடலத்தை எரியூட்ட மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
வெட்ட வெளியில் எரியூட்டப்பட்ட சடலம்.
வெட்ட வெளியில் எரியூட்டப்பட்ட சடலம்.
Published on

பேராவூரணி:

பேராவூரணியை அடுத்த கொளக்குடியில் இருந்த மயான கொட்டகை 

கஜா புயலில் அடியோடு அடித்து செல்லப்பட்டது. இது நாள்வரை மயான கொட்டகை சீரமைக்கப்படவில்லை. 

இதனால் இறந்தவர்களை மழைக்காலங்களில் எரிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

மேலும் சடலத்தை எரிக்க தென்னங்கீற்றினால் கொட்டகை அமைத்து எரிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே உடனடியாக புதிதாக மயான கொட்டகை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com