சேதமான பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்

தோகூரில் சேதமான பயணிகள் நிழற்குடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த பயணிகள் நிழற்குடை.
சேதமடைந்த பயணிகள் நிழற்குடை.
Published on

பூதலூர்:

பூதலூர் அடுத்த தோகூர் கிராமத்தில் உள்ள பஸ்நிலையத்திற்கு திருச்சியில் இருந்து சர்க்கார்பாளையம் வழியாகவும், திருவெறும்பூர் வழியாகவும் 

நகர பஸ்கள் வந்து செல்லும். 

சுற்றுலா தலமான கல்லணையை பார்வையிடவும், தஞ்சை மாவட்ட கிராமங்களுக்கு செல்லவும் தினமும் ஏராளமான பயணிகள் இந்த பஸ் நிலையத்தில் இருந்து இறங்கியும், ஏறியும் செல்கின்றனர்.

இந்த பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பயணிகள் நிழற்குடை பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. 

நிழற்குடை கூரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து உள்ளது. 

அதே போல பயணிகள் நிழற்குடையின் சன்ஷேடு பகுதி இடிந்து 

விழுந்து உள்ளது. 

தினமும் ஏராளமான மக்கள் இந்த நிழற்குடை அமர்ந்து பஸ் ஏறுவதற்கு காத்திருக்கும் நிலை உள்ளது. 

எனவே தோகூர் பஸ் நிலையத்தில் உள்ள பழுதடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com