கோவில்பட்டி புற்றுக்கோவிலில் தைப்பூச சிறப்புப் பூஜை

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் தைப்பூச சிறப்புப் பூஜை நடைபெற்றது.வள்ளி, தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பூஜையில் பங்கேற்ற பக்தர்களை படத்தில் காணலாம்.
பூஜையில் பங்கேற்ற பக்தர்களை படத்தில் காணலாம்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் தைப்பூச சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 10 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இதில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com