தூத்துக்குடியில் பயங்கரம்: பிரியாணி கடை உரிமையாளர் கழுத்தை நெரித்து கொலை

இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகின்றனர். துண்டால் கழுத்தை நெரித்து கொலை.
தூத்துக்குடியில் பயங்கரம்: பிரியாணி கடை உரிமையாளர் கழுத்தை நெரித்து கொலை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் என்ற சிவா (வயது41). பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரும் முத்துக்கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ் (43) என்பவரும் நண்பர்கள்.

இந்நிலையில் நண்பர் கேட்டுக்கொண்டதால் பரமசிவம் மோகன்ராஜுக்கு தள்ளு வண்டியில் பிரியாணி கடை வைத்துக் கொடுத்துள்ளார். இவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிப்காட் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பரமசிவன் வீட்டில் அனை வரும் வெளியூர் சென்றிருந்த தால் மாலை வரை இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், துண்டால் பரமசிவத்தின் கழுத்தை நெரித்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.

இரவில் வீடு திரும்பிய பரமசிவத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் பரமசிவம் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அவரை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பரமசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுதிர், சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com