தென்காசியில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (21-ந்தேதி) நடைபெறுகிறது.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன்
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன்
Published on

தென்காசி:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்காசி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சங்கரன்கோவில், ஆலங் குளம், தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் தி.மு.க. கூட்டணியில் இருக்கிற கட்சிகளின் நகர, பேரூர் செயலாளர், ஒன்றிய செயலாளர் களின் ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (21-ந்தேதி) காலை 10 மணிக்கு குற்றாலம் செங்கோட்டை சாலையில் அமைந்துள்ள ட்ரெஸ்ஸில் ஓட்டலில் நடைபெற இருக்கிறது.

கூட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் சம்பந்தமாகவும், கூட்டணி கட்சிகள் எந்தெந்த வார்டுகளில் போட்டியிடுவது என்பது சம்பந்தமாகவும் பேசப்பட இருக்கிறது

ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி 100 சதவீத வெற்றி பெற்றதை போன்று நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீத வெற்றி பெறுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட இருக்கிறது. 

எனவே தி.மு.க. கூட்டணி தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நகரம் மற்றும் பேரூர் செயலாளர்கள், பேரூர் கழகம் அமைந்துள்ள ஒன்றியங்களின் செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com