செங்கோட்டையில் சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

செங்கோட்டை அருகே இலத்தூர்-நெடுவயல் சாலையோரத்தில் பெரிய அளவிலான பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை படத்தில் காணலாம்.
சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை படத்தில் காணலாம்.
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே இலத்தூர் -நெடுவயல்  சாலையோரத்தில் பெரிய அளவிலான பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

சிவகாமி புறகாலனி விலக்கு சந்திப்பு நெடுஞ்சாலை பல கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலை வழியாக நாள்தோறும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள், பஸ் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.  

மேலும் இச்சாலையின் இரு புறங்களிலும் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளதால் விவசாயம் சார்ந்த பொருட்களை ஏற்றி வர இச்சாலை பெரும் பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் முக்கியமான திருப்பு முனையில் நெடுஞ்சாலை அருகே சாலையோரத்தில் பெரிய அளவிலான அடுத்தடுத்து பள்ளங்கள் உள்ளன.மழை காலத்தில், பள்ளத்தில் குட்டையாக தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் குழாயில் உடைப்பு காரணமாக கசிவு ஏற்பட்டு பள்ளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழும் அவலநிலை உள்ளது.

எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையோரத்தில் உள்ள பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com