இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை முதல்வர் நிறைவேற்றித்தருவார்-பழனி நாடார் எம்.எல்.ஏ. உறுதி

இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை முதல்வர் நிறைவேற்றித்தருவார் என பழனி நாடார் எம்.எல்.ஏ. உறுதி கூறினார்.
இரட்டை குளம் கால்வாய் திட்டம் குறித்த கோரிக்கையை  பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் வழங்கப்பட்ட காட்சி.
இரட்டை குளம் கால்வாய் திட்டம் குறித்த கோரிக்கையை பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் வழங்கப்பட்ட காட்சி.
Published on

சுரண்டை:

சுரண்டை அருகே இரட்டை குளத்தில் இருந்து ஊத்துமலை பெரியகுளம் வரை செல்லும் உபரி நீர் கால்வாய் திட்டம் நிறுத்தப்பட்டு உள்ளதாக  கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து இரட்டைகுளம் பாசன விவசாயிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனி நாடார் எம்.எல்.ஏ.வை சந்தித்தனர்.

அப்போது அவர்களிடம் தமிழக முதல்வர் கண்டிப்பாக இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தருவார்.தேவையில்லாத வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இது 50 ஆண்டுகால கனவு திட்டம்.

ஏற்கனவே 52 கோடியே 40 லட்சம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணிகளுக்கு ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.எனவே கண்டிப்பாக இரட்டை குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும். மேலும் பஞ்சாயத்துகளில் இருந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக முதல்வரிடம் நேரில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

நிதி ஆதாரத்தை பொறுத்து திட்டம் தொடங்குவதில் காலதாமதம் வேண்டுமானால் ஏற்படுமே தவிர கண்டிப்பாக இரட்டை குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என பழனி நாடார் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

இதில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளரும் ஒன்றிய கவுன்சிலருமான முரளிராஜா,ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஊத்துமலை ஊராட்சி தலைவர் வளர்மதி அய்யனார், வாடியூர் தலைவர் பதிவர் என்ற ஸ்தாபக அந்தோணி,நவநீத கிருஷ்ணபுரம் தலைவர் பிச்சைக்கனி, கருவந்தா தலைவர் தானியேல், அச்சங்குன்றம் தலைவர் வெங்கடேஸ்வரி முருகேசன், குறிச்சான் பட்டி தலைவர் மகரஜோதி சரவணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com