பாவூர்சத்திரம் அருகே வேகத்தடை போர்டில் தவறான எழுத்தால் பரபரப்பு

கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவுடையானூர் ஊராட்சியில் பஸ் நிலையம் செல்லும் சாலையில் வேகத்தடை போர்டில் தவறாக எழுத்து எழுதப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வீ.கே.புதூர்:

 தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவுடையானூர் ஊராட்சியில் பஸ் நிலையம் செல்லும் சாலையில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியில் வேகத்தடைகளும் அமைத்துள்ளனர். அதனை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சுட்டிக்காட்டும் வண்ணம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் குறியீடு போர்டு வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் போர்டில் எழுதப்பட்ட வாசகத்தில் வேகத்தடை உள்ளது.... மதுவாக செல்லவும் என்று உள்ள எழுத்துக்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மெதுவாக என்பதற்கு பதிலாக மதுவாக என்ற வாசகம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் தவறாக எழுதப்பட்ட போர்டில் உள்ள வாசகத்தை திருத்தி அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com