தென்காசி நகராட்சி பள்ளியில் உலக சுகாதார தினம்

தென்காசி 13-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக சுகாதார தினம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
உலக சுகாதார தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
உலக சுகாதார தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
Published on

தென்காசி:

தென்காசி 13-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக சுகாதார தினம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் முன்னிலை வகித்தார். கவுசல்யா வரவேற்று பேசினார்.

மருத்துவர் சுசித்ரா மாணவர்களின் உடல் நலம், மனநலம், தன் சுத்தம் மற்றும் மாணவ பருவத்தில் ஏற்படும் உடல் நலப்பிரச்சனைகளும் பாதுகாப்பு முறைகளை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். முடிவில் ஆசிரியர் வின்சென்ட் நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மணிமந்திரி, எப்சிபா, விமலா, தமிழ் செல்வி, யாஸ்மின், மாலையம்மாள் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com