கடையம் அருகே தோட்டத்தில் காப்பர் வயர் திருட்டு

கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியில் உள்ள தோட்டத்தில் மின் இணைப்புக்காக போடப்பட்டு இருந்த காப்பர் வயரை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் செல்வதாசன்(வயது 53). இவருக்கு அந்த பகுதியில் தோட்டம் உள்ளது.

அங்கு மின் இணைப்புக்காக போடப்பட்டு இருந்த காப்பர் வயரை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

இதுதொடர்பாக அவர் கடையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் கடையம் அருகே உள்ள புறங்காட்டான்புலியூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் காப்பர் வயரை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ காப்பர் வயரை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com