புளியரை கோவிலில் திருக்கல்யாணம்

புளியரை சிவகாமி அம்மன் சமேத சதாசிவமூர்த்தி கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

செங்கோட்டை:

புளியரை சிவகாமி அம்மன் சமேத சதாசிவமூர்த்தி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்ததாக வரலாறு கூறப்படுகிறது. 

இந்தாண்டிற்கான திருக்கல்யாண வைபோகம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனைகளுடன் தொடங்கியது.  

அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் தனித்தனியாக கோவில் உள்பிரகாரத்திலிருந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறியை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com