மகளிர் தினத்தையொட்டி பெண்மையை போற்றும் ஓவியங்கள் வரைந்த தென்காசி போலீசார்

தென்காசியில் மகளிர் தினத்தையொட்டி பெண்மையை போற்றும் வகையில் வீர பெண்மணிகளின் உருவங்களை அங்குள்ள பள்ளி எதிரே உள்ள சுவரில் வரைந்தனர்.
பெண்மையை போற்றும் ஓவியங்கள் வரைந்த தென்காசி போலீசார்
பெண்மையை போற்றும் ஓவியங்கள் வரைந்த தென்காசி போலீசார்
Published on

தென்காசி:

தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் மேற்பார்வையில் மஞ்சம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளி எதிரே இருந்த சுவர் புதுப்பிக்கப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களால் நிறைந்திருந்த சுவர் சீரமைக்கப்பட்டது.

பள்ளி மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பெண்மையை போற்றும் விதமாகவும் இந்தியாவின் தலைசிறந்த பெண்மணிகளின் ஓவியங்களை அங்கு வரைந்து மகளிர் தினத்தினை கொண்டாடினர்.

தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து கேக் வெட்டினர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கலிவரதன், சுவாமிநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com