தென்காசியில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு -கலெக்டர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு அட்டைகள் பெற சிறப்பு முகாம் நாளை மறுநாள் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர்  கோபால சுந்தர ராஜ் செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்கிட ஏதுவாக தென்காசி மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் (குடிமை பொருள் வழங்கல் பிரிவு) சிறப்பு முகாம் நாளை மறுநாள் (24-ந் தேதி) நடத்தப் பட உள்ளது. 

எனவே தென்காசி மாவட்டத்தில் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் பெறாத திருநங்கைகள் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு தங்களது விண்ணப்பத்தினை அளிக்கலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com