சேர்வைகாரன்பட்டி ஊராட்சிக்கு பொட்டல்புதூர் நீர்த்தேக்கத்திலிருந்து தனியாக பைப் லைன் அமைத்து தரவேண்டும் -அமைச்சரிடம் ஊராட்சி தலைவர் மனு

சேர்வைகாரன்பட்டி ஊராட்சிக்கு பொட்டல்புதூர் நீர்த்தேக்கத்திலிருந்து தனியாக பைப் லைன் அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் ஊராட்சி தலைவர் மனு அளித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவிடம் சேர்வைகாரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மனு அளித்தார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவிடம் சேர்வைகாரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மனு அளித்தார்.
Published on

கடையம்:

கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் சென்னை சென்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து மனு ஒன்று கொடுத்தார்.

அந்த மனுவில், சேர்வைகாரன்பட்டி ஊராட்சி பகுதிகளுக்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி, ஊராட்சிக்குட்பட்ட 11 கிராமங்களுக்கு பொட்டல்புதூர் தாமிரபரணி நீர்தேக்கத்திலிருந்து தனியாக மோட்டார் மற்றும் பைப்லைன் அமைத்து தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இப்பகுதி  பொதுமக்கள் பயன்பெறுவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் ஊரக உள்ளாட்சி அமைச்சர் பெரிய கருப்பனையும் நேரில் சந்தித்த கொடுத்த மனுவில், “இப்பகுதியில் போதுமான புதிய தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை ஊராட்சிக்குட்பட்ட 11 கிராமங்களுக்கு புதிய தெருவிளக்குகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்“என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com