சிவகிரி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய ஜே.சி.பி.- டிராக்டர் பறிமுதல்

சிவகிரி அருகே தேவிபட்டணம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஜே.சி.பி., டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஜே.சி.பி. எந்திரத்தை படத்தில் காணலாம்.
பறிமுதல் செய்யப்பட்ட ஜே.சி.பி. எந்திரத்தை படத்தில் காணலாம்.
Published on

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் சிவகிரி அருகே தேவிபட்டணம் மந்தை மைதானம், ஜெயச்சந்திராபுரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தேவிபட்டணத்-திற்கு மேற்கே செங்குளம் கண்மாய் பகுதியில் அனுமதியின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த ஜே.சி.பி. எந்திரத்தையும் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். எனினும் டிரைவ-ர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

விசாரணையில் 2 வாகனங்களும் தேவிபட்டணம் காளியம்மன் கோவில் ரோட்டை சேர்ந்த செல்லையா மகன் முருகனுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடிய டிரைவர்களில் டிராக்டரை ஓட்டி வந்தவர் நடுவூர் ராமசாமியாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 27), ஜே.சி.பி. வாகனத்தின் டிரைவர் யார் என விசாரணை செய்தும், வாகனங்களின் உரிமையாளர் முருகன் மற்றும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com