தென்காசியில் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி

தென்காசி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடைபெற்றது.
தன்னார்வலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.
தன்னார்வலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.
Published on

நெல்லை:

தென்காசி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

 உதவி திட்ட அலுவலர் சிவலமுத்து தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சண்முகசுந்தர பாண்டியன், இளமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார வள மேற்பார்வையாளர் சரஸ்வதி வரவேற்று பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன், சண்முகராஜ், ஒருங்கிணைப்பாளர் மணிமந்திரி, பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தன்னார்வலர்கள் தாங்கள் செய்த கற்றல் உபகரணங்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தி செயல் விளக்கம் அளித்தனர். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் பார்வதி, அற்புதமாரி, மாரிமுத்து ஆகியோர் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com