சங்கரன்கோவில் நகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

சங்கரன்கோவில் நகராட்சி புதிய கமிஷனராக சி.வி. ரவிச்சந்திரன் பொறுப்பேற்றார்.
நகராட்சி புதிய கமிஷனருக்கு நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
நகராட்சி புதிய கமிஷனருக்கு நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி புதிய கமிஷனராக சி.வி. ரவிச்சந்திரன் பொறுப்பேற்றார். திருவள்ளுவர் நகராட்சி ஆணையராக இருந்த ரவிச்சந்திரன் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.இந்நிலையில் அவர் சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சங்கரன்கோவில் நகராட்சி ஆணையராக இருந்த சாந்தி கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.அவர் தற்போது தேவகோட்டை நகராட்சி ஆணையாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்ற நகராட்சி ஆணையர் சி.வி.ரவிச்சந்திரனை நகராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி, பொறியாளர் ஜெயப்பிரியா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன், மற்றும் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com