செங்கோட்டை கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு

செங்கோட்டை பகுதியில் உள்ள கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

செங்கோட்டை:

சனி பிரதோஷத்தை முன்னிட்டு செங்கோட்டை தர்ம ஸம்வர்த்தினி கோவில் உடனுறை குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.

ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களில் உள்ள சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். 

சனி பிரதோஷத்தையொட்டி மாலையில் சுவாமி, அம்பாள், நந்திக்கு மா பொடி, மஞ்சள்பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 36 நறுமணப் பொருட்களால் மகாஅபிஷேகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின் சுவாமி, அம்பாள், நந்தீஸ்வரருக்கு தீபாராதனைகள் நடந்தது.

நிகழ்ச்சியில் சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகார உலா வந்தார்.

மகா சனி பிரதோசமான நேற்று தமிழத்தில் கொரோனா வைரஸ் தளர்வு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியளிக்கபட்டதால் செங்கோட்டை சுற்று வட்டார பக்தர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் படி மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு பிரசாதம் பெற்று சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com